எழுத்தாளர் விக்னேஷ் ஹரிஹரன் அசலான ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவருடைய உரைகள் குறித்து பலர் பேசத் தொடங்கியிருக்கின்றனர். கூர்மையானதும் துல்லியமானதுமான அவதானங்களை முன் வைக்கிறார். ஒரு விமர்சக ஆளுமையாகும் தகுதிகளை வளர்த்து வருபவர். இந்தக் கட்டுரையில் விக்னேஷ் எடுத்தாளும் வார்த்தைகளும், அதனை பகுப்பாய்வு செய்யும் விதமும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. ஆனால் இந்தக் கட்டுரையோடு விவாதிக்கவும் முரண்படவும் நிறையக் கருத்து மாற்றங்கள் உள்ளன. என்றாலும் இப்படியொரு விமர்சன அணுகுமுறையை சமகாலத்தில் சந்திப்பதே அரிதும் ஆறுதலும். எழுத்தாளர் உமா மகேஸ்வரி படைப்புக்களை முன் வைத்து சிறப்பிதழ் வெளியிட்டிருக்கும் நீலி இணைய இதழுக்கு பாராட்டுக்கள்.