அகரமுதல்வனுக்கு!

“போதமும் காணாத போதம்” தொடரின் ஒன்பதாவது அத்தியாயம் இதுவரைக்குமானவற்றில் உச்சமானது.  தனியாக வாசித்தாலும் ஒரு சிறுகதை அனுபவத்தை தருகிறது. “போரை விடவும் பூமி பாழானது. ஏனெனில் போர்  கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழி மட்டுமே ” என்ற வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்தேன். உங்கள் எழுத்துக்களின் ஆழத்தைப் புரிந்து கொள்ளவே ஒரு போதம் தேவைப்படுகிறது. ஈழ இலக்கியத்தில் இந்தத் தொடர் வேறொரு அனுபவம். தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.

  • தமிழன்பன்

 

அண்ணா!

உங்க website – ல. போதமும் காணாத போதம் தொடர் படித்தேன். மொத்தமா, புது perspective open ஆகுது. போரில் மூதாதையர் முதல் குழந்தை வரை, ஒரு சமூகம், ஒரு யுகம், போராட்டம், அனைத்தையும் ஒரு சேர கொண்டு வந்த உணர்வுகள். போரின் கொடுமைய தாங்க முடியாத, சகிக்க முடியாத மனித எழுச்சியை ஒரு தெய்வமாக்கி, அந்த தெய்வத்தை பெருந் தீ வனமாக்கி (பெருந்தீ எழுந்தாடும் வெளிச்சம் ஊர் முழுதும் நிலைத்தது.) அதன் மூலம் தீர்வை கொண்டுவந்து, ஈழ மக்களின் பின்புலம், போரும் படுகொலையும் மட்டும் இல்லாமல், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, ஆதி சமூகம், தெய்வம், அனைத்தும் புதிதாக உணர்ச்சிகரமாக இருக்கிறது அண்ணா.

  • மயில் ராஜா

 

“போரை விடவும் பூமி பாழானது. ஏனெனில், போர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வழி மட்டுமே’. ”

“தெளிந்த வானத்தை விடவும் ஆகிருதியில் வலுத்தது என் பெருங்கனவு”.

“இதோ இக்கணத்தில் தியாகத்தின் பலிபீடத்தில் கிடத்தப்பட்டுள்ளேன்”

தொடர் அல்லாது, இதனைத் தனியாக வாசிக்கக் கொண்டாலும் தரம் மிகுந்த ஓரு சிறுகதை.

வாசிக்கத் தந்தமைக்கு நன்றி அகரன்.

  • வளநாடு சேசு

போதமும் காணாத போதம் – 09

Loading
Back To Top