ன்னறம் பதிப்பகத்தின் வெளியீடான  “சுதந்திரத்தின் நிறம்” புத்தகத்தை வாசித்துவிட்டு இன்றுவரை பலநூறு பேரிடம் அதனைப் பரிந்துரை செய்கிறேன். காந்தியவாதி கிருஷ்ணம்மாள் அவர்களை சென்று சந்திக்க வேண்டுமென உளம் கிடந்தது துடியாய் துடிக்கிறது. இந்தப் போராளியின் கால்களைத் தொட்டு வணங்க வேண்டுமென்பது என் கடன். அவரது பாதங்களில் வரலாறு ரேகைகளாக இருக்கும். அவரது உள்ளங்கை பற்றி  “மாபெரும் தாயே” என்று கண்ணீர் பெருகி பாடுவேன். விரைவில் திண்டுக்கல் சென்று தரிசிக்க வேண்டும்.

 

 

எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வெளியான “அன்னையுடன் ஒரு நாள் ” என்று கட்டுரையினை வாசித்தேன். ஞானசேகரன் ரமேஷ் மாபெரும் தாயைப் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தை எழுதியிருந்தார். மிக மிக அபூர்வமான அனுபவப் பதிவு. ஞானசேகரனை ஏற்கனவே அறிந்திருக்கிறேன். உரையாடியிருக்கிறேன். கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள அருகன். மொழிச்சிடுக்கையும், படிமச் சுழற்சியையும் வைத்து எழுதிய கவிதைகளை வாசித்துமிருக்கிறேன். நவீன கவிதை சார்ந்து அவருடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். அவருடைய கவிதைகளின் போதாமை, மற்றும் பாவனை குறித்து விமர்சித்துமிருக்கிறேன். அந்தச் சந்திப்புக்கு பிறகு அவர் எழுதும் கவிதைகளுக்காக காத்திருந்தேன். ஆனால் இப்படியொரு கட்டுரை மூலம் ஒரு புதிய தளிராக ஒளிதேடிச் சென்றதை கூறியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து  தேடலின் வழியாக அற்புதங்களை தரிசியுங்கள் ஞானம்!

அன்னையுடன் ஒரு நாள்

Loading
Back To Top