வணக்கம் அகரமுதல்வன்! மிகச் சிறப்பான உரை.நவீன எழுத்தாளர்கள் பலர் நம் தமிழின் நீண்ட நெடுங்கணக்கிலிருந்து வெகு தூரம் விலகி மேற்குலக இலக்கிய வகைமையின் வழிபாட்டாளர்களாக மாறிய நிலையில் அவ்வையின் வழி ஒரு மரபின் நினைவூட்டலாக உங்கள் உரை அமைந்துள்ளது. நான் மிகவும் ரசித்தேன். கலைஞர்களை, படைப்பாளிகளைக் கொண்டாடுவது என்பது இப்போது புதிதாக இல்லை ,சங்க காலத்திலிருந்து வருகிற சால்பு அதுவெனச் சொல்லியிருப்பீர்கள் என நினைக்கிறேன். அதுதான் உண்மை. தொடருங்கள். உங்கள் எதிர்காலம் இன்னமும் வெளிச்சம் நிறைந்தது. ஒரு மூத்த சகோதரனாக உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

  • முருகேசன்

உங்களுடைய உரையைக் கேட்டேன். மரபிலக்கியங்களோடு பிணைப்புக்கொண்ட நவீன இலக்கியப் படைப்பாளியாக உங்களை எண்ணியிருந்தேன். இந்த உரை அதற்கு சாட்சி.

  • அபி

இந்த உரையில் இயங்கும் மனம் மரபானது மட்டுமல்ல. நவீன பார்வையும் உள்ளது. “ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்” எனுமிடத்தில் தாமிரபரணியின் இருவகையான புலங்களின் இலக்கியத்தைச் சுட்டிக்காட்டியதுதான் நவீன பிரக்ஞை. உங்களுடைய உரையின் தொடக்கமும் முடிவும் மிகச் சிறப்பானது. அதியன் அவ்வைக்கு கொடுத்த நெல்லிக்கனியை “சாவா மருந்து” என்றீர்கள். இந்தச் சொல்லை உங்கள் உரைமூலமே தெரிந்து கொள்கிறேன்.

  • இந்து

Loading
Back To Top