எழுத்தாளர் ஜெயந்தன் நினைவினைப் போற்றும் விதமாக சிறந்த இலக்கியங்களுக்கு வழங்கப்படும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்காக புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. என்னளவில் பெருமகிழ்ச்சியான செய்தி. இந்த விருது முன்னெடுப்பினை தீவிரமாக ஏற்றிருக்கும் எழுத்தாளர்-  ஓவியர் சீராளன் அவர்களுக்கு நன்றி. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதினைப் பெற்ற பல படைப்பாளிகளுள் நானுமொருவன். என்னுடைய புலம்பெயர் வாழ்வின் முதல் விருது. எழுத்தாளர் ஜெயந்தன் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறேன். டிஸ்கவரி பதிப்பகத்தினர் அந்நூலை வெளியிட்டு உள்ளனர். புதிய படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரவல்ல மாண்பு கொண்ட விருது. வாய்ப்புள்ளோர் நூல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

 

 

Loading
Back To Top