Homeதூர எல்லை கவிதைகள் தூர எல்லை May 19, 2024May 19, 2024 01 பட்டாம்பூச்சியை பிடித்தபடி காட்டில் அலையும் அந்தியை நேற்றைக்கு அழைத்து வந்தது மழை. 02 எவ்வளவு நேர்த்தியானவை இவ்விரண்டு பாதைகள். திசைநீளும் போக்கில் வீசும் காற்றுக்கு தூர எல்லை தெரியும். 03 அற்புதமே! ஒளிரும் சுடரின் உச்சியில் கரைவது நீதானே? Post Views: 275