பொதுவாக அன்றைய வழக்கத்திற்கு மாறாக திசைகளின் நடுவே தொகுதி வெளியான ஆண்டே விற்றுத்தீர்ந்தது. சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி என பல முன்னோடிப்படைப்பாளிகள் சிறந்த மதிப்புரைகள் எழுதியிருந்தனர். அவ்வாண்டின் சிறந்த நூல்களிலொன்றாகப் பேசப்பட்டது. ஆகவே அடுத்த தொகுதி ஒன்றை கொண்டுவரலாமென்னும் எண்ணம் ஏற்பட்டது. ஆனால் நான் விஷ்ணுபுரம் நாவல் எழுதிக்கொண்டிருந்தேன். 1997 டிசம்பரில் விஷ்ணுபுரம் நாவலை அன்னம் அகரம் வெளியிட்டது. அது அன்றைய இலக்கியச் சூழலில் ஓர் அலை என நிகழ்ந்த படைப்பு.

அழியாவினாக்களின் கதைகள்

 

Loading
Back To Top