01

நிலவில் ஒரு வீடுள்ளது

நழுவும் மேகங்கள்

ஜன்னலில் அமர்ந்து சிறகுலர்த்துகின்றன.

02

அத்தகைய மழை நாளை

நீ மறந்துவிட்டாயா!

குளிர்ந்த நாணல்களின் பாடலையேனும்

நீ மறவாதே.

03

வானத்தைப் படைத்தவனே!

உன்னை அணைத்துக் கொள்கிறேன்

எனக்காக

அந்தக் கண்கூசும் சூரியனை

விடைகொடுத்து அனுப்புவீராக!

04

தங்கமீன்களின் கண்ணாடித் தொட்டி

நீந்தித்  தியானிக்கும் ஜலவெளி

இன்று ஒற்றை மீனின்

நீச்சலுக்கும் – மிதத்தலுக்கும் இடையில்

மல்லாந்திருப்பது

சூனியமா?

இறையா?

 

 

 

 

 

 

 

Loading
Back To Top