01

றகுகள்

மண்டிக்கிடக்கும்

பாழ் கிணற்றுள்

மிதக்கும்

வானின் பிம்பம்.

02

பறவைகள் வந்தமரா

முதுமரத்தின் கீழே

வீற்றிருக்கும்

சித்தமிழந்த

கொடுநிழல்.

03

மரமெங்கும்

சிறகுலர்த்துகின்றன

பறவைகள்

நிதமும்

இறகுகள் உதிரும்

இலையுதிர்காலம்

பூமிக்கு.

 

 

 

 

 

Loading
Back To Top