சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் ஒருவரான உமாபதி சிவாசாரியார் எழுதிய காப்புச் செய்யுள்களில் ஒன்றில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார மூவரோடு மாணிக்கவாசகப்பெருமானையும் ஒன்றாக இணைத்து வணங்குகிறார், இது நால்வர் துதி என்று வழங்கப்படுகிறது. இவரது காலம் பதிமூன்றாம் நூற்றாண்டு. இன்று சமயக்குரவர் நால்வர் என சைவம் வகுத்துரைக்கும் இந்த நால்வரும் ஒருவரிசையில் வைக்கப்பட்ட காலம் இது.