01
வனமிழந்த யானையை
தன் வழித்தடத்திற்கு பழக்குகிறான்
பாகன்
பிளிறும் ஓசையில் தீனம் பெருகி
நிலத்தை அதிர்விக்கிறது.
அங்குசம்
ஒரு யாழ் நரம்பை போல
பாகனின் கையில் துடிக்கிறது.
02
நீரே பாகன்!
என் வனத்திலும் நீரே வழியுமாவீர்.
03
என் செல்ல சிணுங்கலே
நீயொரு மாமத யானை
நீ முறித்துப் போடும் கானகத்தின்
பரப்பில்
என்னை நான் பதியமிட்டு
வளர்ப்பேன்.