நம் இலக்கியவாதிகளுக்கு இலக்கியத்திற்கும் படிப்புக்கும் இப்படி ஒரு புனிதமான தளம் உண்டு என்பதே தெரிந்திருக்காது. படிப்பு இத்தனை பயனுள்ளது என்றும் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மணியை படிப்பு அறிஞராக்கியது. அவரைப் போன்ற பிறரில் இருந்து மேம்பட்டவராக ஆக்கியது. அவருடைய சூழலின் எல்லா எல்லைகளில் இருந்தும் விடுதலை செய்தது. ஆம், இலக்கியம் விடுவிக்கும், மேம்படுத்தும், நிறைவாக்கும் என்று அவரை காண்கையில் சொல்லிக்கொள்கிறேன்.