பதினான்கு தலைமுறைக்கு ஒருமுறை

வாய்க்கிறது

சுதந்திரம் தூக்கலான ஓர் எதிர்ச்சொல்.

குருதிக்கறை கொண்ட

உடைந்த பல்

அதிகம் சிரிக்கிறது

ஒரு புதிய அர்த்தத்தில்.

அதோ

அதிகாரி வீட்டுக்குள்

பன்றிக்குடலை எறிந்துவிட்டு ஓடுகிற சிறுவன்

வரலாற்றில்

புழுதி கிளப்ப போகிறான்.

Loading
Back To Top