01

 

ஒளிர்ந்தபடியிருக்கும் 

குண்டு பல்பை 

ஊதி அணைக்க

துள்ளித் துள்ளி 

தாவுகிறது 

குழந்தை 

இதுவே 

ஒற்றை 

மெழுகுவர்த்தியென்றால் 

எத்தனை தடவை 

அணைந்து 

ஒளிர்ந்திருக்கும் 

துள்ளித்தாவும் 

இந்தச் 

சுடருக்காய்.

02

நேற்றைக்கும் 

இப்படித்தான் 

அட்சரம் பிசகாமல் 

இப்படியேதான் 

தன் கால்களை அசைத்து 

உதடுகளை உள்ளே குவித்து 

உறங்கியது 

குழந்தை.

இப்படித்தான் 

இப்படித்தான் 

குழந்தை 

இப்படித்தான்.

03

அவளுக்கென்றொரு வானம் 

அவளுக்கென்றொரு தாழ்வாரம் 

வாய்த்துவிட்டால் 

அவளுக்கென்றொரு மழை

பெய்யும்.

 

Loading
Back To Top