
01
இரவை அழைத்து வந்ததைப் போலிருந்தது
அவள் பாடல்
அந்தக் குளிரில்
அந்த இருட்டில்
நடுங்கும் சொற்களை
திரியுருட்டி
விளக்கென ஏற்றிவைத்தால்
உச்சஸ்தாயில்
அவள் குரல் அசைந்தாடுகிறது
விளக்கின் சுடரோ
எழுந்தாடுகிறது.
02
இங்கேதான் எச்சமிட்டது
பறவை
இங்கேதான் விதை முளைத்தது
காலம்
இங்கேதான் சிறகுதிர்த்தது
மரம்
இங்கேதான்
இங்கேதான்
வாழ்வெழுந்தது.