Homeகணம் கணம் கவிதைகள் கணம் கணம் February 4, 2026 01 எங்குமில்லாத மலரைத் தேடி பறக்குமொரு வண்ணத்துப்பூச்சி இன்றைக்கு ஏன் எந்தன் மொழியில் அமர்ந்தது. 02 கடலில் மிதக்குமொரு பழைய கலம் அலையில் நிலவு உடைந்து நீந்திப் போகிறது. 03 பூமியின் நிழல் விழும் பூவின் இதழ் விழும் எல்லாமும் கணம் கணம் நிழல் இதழ் Post Views: 45