01

இளங்காலையை நினைவூட்டுகிறது

இவளின் முகம்

இலைகளைசைக்கும்

இளங்காற்றின்

ஈரமும்

நிழலும்

சடைத்த கூந்தலில்

மலர்ந்திருக்கிறது

 

க்ளிப்

வண்ணத்துப்பூச்சி.

 

02

கடலை இழுத்து வரும்

அலைகளில்

உடல் குளித்து விளையாடும்

நாய்

இரவின் அழகெழுதி

கரை மணலில்

மொழி இயற்றும்

சிறுநண்டு

கடலுக்கும்

கரைக்கும்

வெளியே

கொடி அசைய

பார்த்திருக்கும்

படகு.

 

 

Loading
Back To Top