01

முள்ளுச்செடியில்

சிக்குண்டு

காற்றிலாடும்

பாம்புச் சட்டையை

அணிந்திருக்கிறது

மதியம்

அசைந்து

அசைந்து

பாம்பென

ஆகுமோவென

பார்த்து நிற்கிறது

பொழுது.

02

 

நிலம் மண்டியிட்டு

பறவையிடம் கேட்கிறது

முதல் விதையை

ஒரு வனாந்தரத்தை…

 

 

Loading
Back To Top