கடலைச் சூடியமரும் அந்தியொன்றில் 

கானம் இசைக்கும் பறவைக்கு 

கைகளை நீட்டினேன் 

வந்தமர்ந்ததும் 

விரல்கள் இலைகள் ஆயின 

கால்கள் வேர்களாயின 

உச்சியில் காற்று நிறைந்ததும் 

நான் அசைகிற சப்தம் 

மலர்கிற நிசப்தம் 

எல்லாமும் 

காட்டின் மூச்சை 

அழைத்து வந்தது.

Loading
Back To Top