நான் படைத்த கடலுக்கு 

பெயரிடமுடியாதவொரு துயரம் 

நெடுங்காலமாய் மேலெழும்ப இயலாத 

கொந்தளிப்பின் கீழ்மட்ட அசைவு 

ஆனாலும் 

அந்திகள் தோறும் அலையை 

இழுத்து வந்து 

ஈரஞ்செறிய துயில் எழுப்பியதும் 

மூச்சுத் தவித்து 

கிளைகள் போல சுழன்றாடியதும் 

நின்றொளிரும் சுடரெனக் 

கனவில் எரிந்து 

திடுமென உயரும் கடலின் 

கீழே 

கீழே 

நடுநடுங்கி நீந்தும் 

என் கண்ணீர் 

நான் படைத்த கடலுக்கு 

பெயரிடமுடியாதவொரு துயரம்.

 

Loading
Back To Top