01

வானத்தைச் சுழன்று

பார்த்தும்

காணவில்லை.

ஒளியூறி பூரித்திருக்கும்

மேகத்திரளில்

நிலவைத் தேடும்

ஜீவிதத்தை தீண்டுகிறது

இரவு.

    02

ஜென்சிக்கு

தெய்வீக குரல்

என்றுருகும் அக்கா

காதலின் கசப்பினால்

தொங்கிக் கொண்டாள்.

அவளுடைய குரல் வளையை

இறுக்கிய

கயிற்றை இழக்கி

விழி மடலை விரித்தேன்.

இரு கண்ணோடு நின்றாலும் இமை மீது

சுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சுமென

ஜென்சி

பாடிக்கொண்டேயிருக்கிறாள்.

    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Loading
Back To Top