உனக்கும் எனக்குமிடையே

வெந்து போவது

நினைவுகள் அல்ல

மூச்சு

உனக்கும் எனக்குமிடையே

நீந்திச் செல்வது

கூடல் அல்ல

அலை

உனக்கும் எனக்குமிடையே

அழியாதிருப்பது

காதல் அல்ல

தழும்பு.

Loading
Back To Top