எனக்கென பாஷை உண்டு

எனக்கென பாடல் உண்டு

எனக்கென ராகம் உண்டு

எனக்கென உண்டு

பிரபஞ்சம் காணாதவொரு

கானக மலர்

எனக்கென உண்டு

இதுவரை உதிக்காதவொரு

சூரியன்

எனக்கென உண்டு

இதுவரை தேயாதவொரு

பூரணம்

இதுவரை வளராதவொரு

தேய்பிறை

உண்டு

உண்டு

எனக்கென

நான்

உண்டு.

 

Loading
Back To Top