
நானொரு மாங்கன்று
என் பூவினில் காய்க்கும் யுகம்
நான் பருவத்தின் மங்கலச் சூல்
என் கனிகளில் காலாதீத ஒளி
பின்னே
இலைகள் உதிர்ந்து
கிளைகள் முறிந்து
உலர்ந்த தழும்பாவேன்
நறுமணமற்று சிதையென ஆவேன்
தீயெனத் துளிர்த்து
வானெழும் போதினில்
விசும்பின் துளியெனக் கரைவேன்
விசும்பின் நிழலென ஆவேன்
விசும்பும் ஆவேன்.