
மதிப்பிற்குரிய எழுத்தாளர் வி. அமலன் ஸ்டேன்லி அவர்கள் எழுதிய “புத்தம்” நாவல் தமிழினி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பாக நடந்த வெளியீட்டு விழாவில் புத்தம் நாவல் குறித்து விமர்சகர் விக்கினேஷ் ஹரிகரன் அவர்கள் ஆற்றிய உரையைக் கேட்டேன். இந்தத் தலைமுறையில் சிறந்ததும் ஆழமானதுமான விமர்சனப் பார்வையும், மொழியின் விரிவும் கொண்ட இலக்கிய நம்பிக்கையாக ஒளிர்கிறார். உரைக்கு மொழியின் ஒழுக்கு மிகவும் முக்கியம். ஒரு கம்பீரம் வேண்டும். அது நாம் முன்வைக்கும் பார்வையில் இருக்கும் தெளிவு தருகிறது. இந்த உரை இளந்தலைமுறையாகிய எம்மைப் பெருமைப்படுத்துகிறது. எனக்கு விக்கினேஷ் ஹரிகரனை இப்படி விளிக்கத் தோன்றுகிறது. இதோ ஒரு வெளிச்சம்.