ஏந்தி நிற்கும் திருவோட்டில் 

இதுவரை விழுந்த தர்மத்தை 

எண்ணுகிறார் 

யாசகர் 

எத்தனை எத்தனையோ 

கணக்குகளும் 

பிரித்தல்களும் 

கழியாத 

வாழ்விற்கு முன் 

படையலாகின்றன 

சில்லறைகள்.

Loading
Back To Top