Homeஎழுந்தவை பறந்தவை கவிதைகள் எழுந்தவை பறந்தவை January 29, 2026January 29, 2026 01 நீலவானை நெய்யும் சிறகுகள் யுகம் யுகமாய் கிளையிலிருந்து எழுந்தவை பறந்தவை. 02 காலம் எரிகிறது கதைப்பாடலோடு பூமியின் துயரை எண்ணிக்கொண்டிருக்கிறது வரலாறு. 03 சொற்சித்திரத்தின் நிழலில் எழும் மனக்குகையில் எதிரொலிக்கும் வாக்குமூலம் என் கதை. Post Views: 38