01

காகங்கள் வந்தமர்கின்ற

ஜன்னல் கட்டில் 

நீர் நிரப்பி படைத்தேன் 

அருந்தாத 

காகங்கள் 

எல்லாம் 

அப்பன்.

அருந்திய 

காகங்கள் 

காலம்.

02

நதியில் சலசலக்கிறது 

நிலவின் ஒளி 

கரையில் மலர்கிறது 

இரவு.

Loading
Back To Top