01

நதிக்கரையில் 

பசியாறும் 

பொழுதொன்றில் 

கனிகிறது 

புதிய திசை 

நீள்கிறது 

ருசியின் கிளை.

 

02

திசையொன்றில் 

ஒடுங்கிய பாதையில் 

நிழல் விரிக்கும் 

வெயிலின் 

இதழ்.

 

03

மங்கிய நிலவொளியில் 

விதையைப் பதிக்கிறான் 

நாளையது 

சூரியனை எழுப்பிக்கொண்டு 

பூமிக்கு மேலே 

உதிக்கும்.

Loading
Back To Top