Homeகளம் கவிதைகள் களம் February 17, 2026February 17, 2026 நான் சொல்லி ஒருமுறையேனும் பூ வீழாத நாணயத்தை என் கட்டை விரலில் நிறுத்தி வானை நோக்கி சுழற்றியதும் தலையென்றான் எதிரி பூவுக்கும் தலைக்குமாய் வானமும் நிலமும் அப்படித்தான் குனிந்தும் அண்ணார்ந்தும் பார்த்தபடியிருக்கிறது. Post Views: 35