
01
நெஞ்சில் அரக்கிருள் ஓய்ந்த
கணந்தொறும்
உன் நினைவு கிழித்திறங்குகிறது
பாழின் சங்கீதம்
படைக் கலங்களுடன்
சிலிர்த்து இறங்குகிறது
எனதுயிரின் வாதை
வெட்ட வெட்டத் தழைக்குமா?
போக்கிழந்து முணுமுணுக்கும்
சொல்லின் கருப்பைக்குள்
பற்றியெரியும்
என் பிரார்த்தனை
கிளர்ந்தெழுந்து
கனல் தீண்டி
வந்தமர்க!