01

நந்தியாவட்டை பூக்கள்

உதிர்ந்து கிடக்கும்

பாழடைந்த

முகப்பு

உத்தரத்தில்

பாரம்

தாளாது தொங்கும்

மதுரக் கருப்பையிலிருந்து

சொட்டுகிறது

ஜன்னல்கள்

அடைத்த

வீட்டின்

தனிமை

தேனீக்கள்

பறந்து பறந்து

இனிப்பை

அள்ளிவருகின்றன

இருளுக்கு.

 

 

Loading
Back To Top