01

சிறியவை அவன் பாதங்கள் 

சிறியவை அவன் கைவிரல்கள் 

சுழன்றும் 

நடந்தும் 

கைகளை நீட்டி 

என்னை ஏந்த அழைக்கையில் 

அமுதூட்டிய 

அன்னையவள்

ஓடிச் சென்று அவனைத் தூக்குகையில் 

நானிருந்த கருப்பையின் 

வாசம் 

அவன் எச்சில்

குழந்தைக்கும் 

எப்போதும் 

நானொரு 

குழந்தை.

 

02

நேற்றைக்கு அந்தியில் 

வீழ்ந்திறந்தது 

பறவை

அதைத் தாங்க நினைத்து 

கீழிறங்கிய 

மேகம் 

அந்தரத்தில் 

கரைந்தது.

Loading
Back To Top