01

கனவைப் போல பிறிதொரு 

சரித்திரம் இல்லை

கடிகாரத்தின் முட்களில் 

அசையும் காலம் 

வரலாறென 

எழுந்து நிற்கும்.

02

மண்புழுக்கள் கனவுக்குள் 

விதையிடுகின்றன  

ஆனால்

நிலமுமில்லை 

மழையுமில்லை.

 

03

எரியும் பாடலுக்குள் 

சொல் தேடி வீழ்கிறான் 

எரிகிறது 

எரிகிறது 

பாடல். 

Loading
Back To Top