எழுத்தாளர் ஜா.தீபாவின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். குருபீடம் சிறுகதை மூலம் பெருமளவிலான வாசகப்பரப்பை பெற்றவர். “மறைமுகம்” சிறுகதை  முக்கியத்துவமானது.  சமீபத்தில் “பழி” என்றொரு சிறுகதை சிறந்த கலையமைதியோடு கூடிய கதை. சமகாலச் சிறுகதை ஆசிரியர்களில் ஜா.தீபா குறிப்பிடத்தகுந்தவர். அவருடைய “நீலம் பூக்கும் திருமடம்” சிறுகதைத் தொகுப்பினை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஜா. தீபாவின் இணையத்தளத்தில் உள்ள “நிணம்” என்கிற சிறுகதையை இன்று தான் வாசித்தேன். மிகச் சிறந்த முயற்சி. கிட்டத்தட்ட சவால் நிறைந்ததொரு களத்தை கையாண்டிருக்கிறார். காரைக்கால் அம்மையை அறிந்தவர்களுக்கு இந்தக் கதையில் வருகிற செல்லத்தை உணர முடியும். இன்றைக்கு சுடுகாட்டில் போய் ஒளிந்து கொள்ளும் செல்லத்தை காரைக்கால் அம்மையாக ஜா. தீபா உருவாக்கவில்லை. மாறாக அவள் எதிர்வினையாற்றும் இடம் முக்கியமானது.  இந்தக் கதையின் இறுதிப் பந்தி மிக முக்கியமானது.

“வீடடையும்போது தியாகு தூங்காமல் இருந்ததை அறிந்தாள். செல்லா தானாக கட்டிலில் அமர்ந்தாள். தியாகு அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை. செல்லா இனி தான் எங்கும் ஒளிவதில்லை என்றாள். தனக்கு தந்த அங்கீகாரமாக அதனை எடுத்துக் கொண்டு அவள் மேல் விழுந்தான். காடலையும் பேயினையும் எலும்பு உடையும் ஒலியையும் தனக்குள் உருவாக்கிக் கொண்டாள். முள்ளி தீந்து முளரி கருகிய வாசனை தொண்டை வரை அவளுள் கமறியது. அது அவளை கிளர்ச்சியுறச்செய்தது.  தியாகு சோர்ந்தான். “செத்த பிணத்தை தெளியாதொரு பேய்” என்றாள் தியாகுவிடம் ரகசியம் போல.

அவன் “ம்” என்று முணங்கித் திரும்பினான்.”

https://jadeepa.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

 

Loading
Back To Top